கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 2018, 2019, 2020 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் முதுகலை மாணவர்கள் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அன்னை கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் மு.அன்வர் கபீர் தலைமையேற்றார். அன்னை கல்விக் குழும துணைத்தலைவர் மருத்துவர் அ.எகியாநயீம் முன்னிலை வகித்தார். அன்னை கல்விக் குழும தாளாளர் மு.இ. அப்துல் கபூர் பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதியரசர் ராஜேஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். சமூகத்திற்காக பாடுபடவேண்டும். உயரிய எண்ணத்தோடும் சிந்தனையோடும் வாழ்வில் உயரவேண்டும் என்று கூறி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த 60 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை அன்னை கல்விக் குழும தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் ராஜ்குமார் , கல்விக் குழும இயக்குநர் ரவி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர் முனைவர் சி.ஆனந்த் முனைவர் மணி துணை முதல்வர் முனைவர் லொயோலா பீரிஸ் பேராசிரியர்கள்
இளஞ்செழியன்,ராஜா மற்றும் அன்னை கல்விக்குழும அனைத்து முதல்வர்கள், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *