சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நாகேஸ்வரி என்ற மாணவி +2 பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று, அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

சிறப்பு தமிழ் பாடப் பிரிவில் பயின்ற நாகேஸ்வரி
தமிழ் 92
ஆங்கிலம் 61
பொருளியல் 89
வணிகவியல் 96
கணக்கு பதிவியல் 94
சிறப்புத்தமிழ் 93 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் பள்ளியின் மாணவ தலைவியாகவும் திகழ்ந்ததுடன், பள்ளி சார்பில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு கலை, பேச்சு, நடன போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.

படிப்பிலும் படு சுட்டியான நாகேஸ்வரியின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது தாய் கமலா தையல் வேலை பார்த்து ஏழ்மை நிலையிலும் தனது மகளை படிக்க வைத்துள்ளார்.

8 ம் வகுப்பில் இருந்து தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறப்பு தமிழ் பாடம் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள நாகேஸ்வரி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் படித்து சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என தெரிவித்தார்.

பேட்டி: நாகேஸ்வரி (பள்ளியில் முதலிடம் பிடித்து மாணவி)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *