கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாடித்தோட்டத்தில் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள் எங்கள் வீட்டிலும் மாடித்தோட்டம் அமைப்போம் என உறுதி

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சூழல் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், களப்பயிற்சி பெறுவதற்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 22 பேர்கள்
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள், கோவில் நந்தவனங்கள், மாடித்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் நான்கு நாட்கள் பயிற்சி பெறுவதற்காக
நீடாமங்கலம் வந்துள்ளனர்.

முதல் நாள் பயிற்சியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாலாஜி நகரில் உள்ள கிரீன் நீடா மாடித்தோட்டத்தில், கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் பயிற்சி அளித்து பேசுகையில், நஞ்சில்லா காய்கறிகளை உண்ண ஆசைப்பட்டால் காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

மாடித்தோட்டத்தில் ஒரு வீட்டுக்கு தேவையான காய்கறிகளை எளிமையாக செலவில்லாமல் வளர்த்து பயன் பெறலாம், நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகளை 15 நாளில் அறுவடை செய்து உட்கொள்ள முடியும். கத்தரி, வெண்டை, கொத்தவரை, மிளகாய், தக்காளி, வெள்ளரி, பீர்க்கன், சுரை, அவரை போன்ற காய்கறிகள் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது

இதனை அனைத்து இல்லத்தரசிகளும் செய்திட முன்வர வேண்டும்.. மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பவர்கள் உடற்பயிற்சிக்கு என தனியாக நேரம் ஒதுக்கிட வேண்டியதில்லை. எவ்வித உரமும் இன்றி விளையும் இந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் கடைகளில் வாங்குவதை விட பல மடங்கு ருசியானதாக இருக்கும். நமது காய்கறி வாங்கும் செலவு பல மடங்கு குறையும் என்றார்.

மாணவிகள் கூறுகையில் மாடித்தோட்டம் பயிற்சி பெற்றதும் எங்களுக்கும் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது, பயிற்சி முடிந்து வீட்டுக்கு சென்றதும் நிச்சயம் மாடித்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை நாங்களும் உண்போம் என்றனர்

இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக கிரீன் நீடா அமைப்பின் குறுங்காடுகளில் வேளாண் கல்லூரி மாணவ மாணவியர் பயிற்சி பெற்று செல்கின்றனர் பயிற்சியில் மரங்கள் வளர்ப்பு பராமரிப்பு பயன்கள் குறித்து குறிப்பெடுத்து செல்கின்றனர் பயிற்சி பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குகிறோம் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *