தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் தக்காளி மார்க்கெட் பகுதி, ஒசூர் மெயின் ரோடு பைபாஸ் சாலை எம்ஜி ரோடு பகுதிகளில் மாம்பழம், குளிர்பான விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா. மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழங்கள் விரைவாக பழுக்க செய்ய செயற்கை முறையில் கார்பைடுகல் மற்றும் எத்திலின் இராசயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைத்து விற்பனை.

செய்யப்படுகின்றனவா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பாலக்கோடு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை பழக்கடைகள், சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் சாலையோர நடமாடும் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வில் கார்ப்பரேட் கல்லோ செயற்கை பழுக்க வைக்க பவுடர் பாக்கெட் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என அறியப்பட்டது. மேலும் குளிர்பான கடைகள், பழக்கடைகள் மற்றும் பேக்கரிகள் உணவகங்களில் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் உரிய காலாவதி தன்மை உள்ளவனா எனவும் கண்காணித்து பரிசோதிக்கப்பட்டது.

மாம்பழ மற்றும் கார்பனேட் வாட்டர் குளிர்பானங்கள் தரம் அறிய மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டுள்ளன. எம்.ஜி.ரோடு சாலையில் ஒரு சிப்ஸ் கடையில் பயன்படுத்தப்படும் குடிநீர் கேன்கள் மாசு படிந்து நிறம் மாறிய குடிநீர் கேன்கள் அப்புறப்படுத்தி புதிய கேன்களில் கத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

மேலும் உபயோகப்படுத்திய எண்ணெயை முறையாக பராமரிக்காமலும் இருந்தது கண்டறியப்பட்டு, 3 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது.

மேற்படி கடைக்கு நியமன அலுவலர் உத்தரவின் பெயரில் உடனடி அபராதம் 1000 ரூபாய் விதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் தொடர நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *