இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், ரவுடிகளின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் சாலமன் ராஜா (ஆற்காடு கிராமிய வட்ட காவல் நிலையம்), சசிகுமார் (ஆற்காடு நகர வட்ட காவல் நிலையம்), பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் ஆய்வாளர்), லட்சுமிபதி (அரக்கோணம் தாலுக்கா வட்ட காவல் நிலையம்), மணிமாறன் (காவேரிப்பாக்கம் வட்ட காவல் நிலையம்), உதவி ஆய்வாளர்கள் மகாராஜன் (வாலாஜா காவல் நிலையம்), தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), நாராயணசாமி (அரக்கோணம் தாலுகா காவல் நிலையம்), ரகு (கொண்டபாளையம் காவல் நிலையம்), அமரேசன் (ஆற்காடு நகர காவல் நிலையம்), பாலாஜி (இரத்தினகிரி காவல் நிலையம்), சேகர் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), வரலட்சுமி (அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம்), சிறப்பு உதவியாளர்கள் உதயசூரியன் (ஆற்காடு தாலுகா காவல் நிலையம்), அண்ணாமலை (இரத்தினகிரி காவல் நிலையம்), பழனி (அரக்கோணம் நகர காவல் நிலையம்), கார்த்திகேயன் (வாலாஜாபேட்டை காவல் நிலையம்),தலைமை காவலர்கள் முத்துராணி (ரத்தினகிரி காவல் நிலையம்), லட்சுமணன் (ஆற்காடு நகர காவல் நிலையம்), வேணுகோபால் (அவளூர் காவல் நிலையம்), பிரகாஷ் (இரத்தினகிரி காவல் நிலையம்) உசேன்பாஷா(வாழைபந்தல் காவல் நிலையம்), முதல் நிலைக் காவலர்கள் வெங்கடேசன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), தசரதன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), இரண்டாம் நிலை காவலர்கள் சிவக்குமார் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்),
ஜெயக்குமார் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்),சசிகுமார் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), அறிவழகன் (அவளூர் காவல் நிலையம்)
ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *