கயத்தாறு,
பாஞ்சாலங்குறிச்சியில் அருள்மிகு வீரசக்க தேவி ஆலய 68 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடத்தில் இருந்து 40 வது ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்செ. ராஜ் அவர்கள் ஜோதியைஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடத்திலும் ,அவரது மணி மண்டபத்தில் உள்ள 7அடி உயர வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .பின்னர் அங்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயத்தின் முன்பு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இந்த தொடர் ஜோதி ஓட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணியின் சார்பில் இந்த ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார் .

இளைஞர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வம் ,இளைஞரணி பொருளாளர் பொன்ராஜ் ,இளைஞரணி துணைத் தலைவர் சரவணகுமார், துணைச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,

இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் செண்பகராஜ், மதிமுக மாநில தீர்மானகுழு உறுப்பினர் கிருஷ்ணசாமிபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகடம்பூர் முத்து பாண்டியன்,கயத்தார் கிழக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் சிவ பாண்டியன் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவியேகராஜ் ,
துணை தலைவர் வீரமல்லு,வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதாகருணாநிதி ,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கட்டபொம்மன் சிலையின் முன்பு வீர விளையாட்டுக்கள் சிறுவர்கள் சிலம்பாட்டம் குறிப்பிட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெற்றன. வழிநெடுகிலும் வானவேடிக்கை மற்றும் செண்டா மேளம் முழங்க மோட்டார் சைக்கிளில் மஞ்சள் கொடி கட்டி அணிவகுத்துசென்றனர், பின்பு கார், வேன், லாரி உள்பட வாகனங்கள் சென்றன. கயத்தாறு,கடம்பூர், பசுவந்தனை , கீழமுடிமன்,ஓட்டப்பிடாரம் உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பாஞ்சாலங்குறிச்சி செல்கின்றனர்.வழிநெடுகிலும் மேலதாத்துடன் செல்வதால் மக்கள் வீர விளையாட்டுகளையும் பார்த்தனர் .இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோவில்பட்டி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கயத்தார் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், காசிலிங்கம், பால் ,ஆகியோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *