காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாசுதேவன் – சரிதா தம்பதியினர்.

வாசுதேவன் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் மதன்,80% சதவிகிதம் பார்வை திறன் குறைபாடு உள்ளவராக உள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வருகிறார்.

பார்வை திறன் குறைபாடு உள்ள நிலையிலும் பள்ளி ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், பெற்றோரின் உதவியோடும், ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று தமிழில் 87, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 100,அறிவியல் 96,சமூக அறிவியலில் 97,என மொத்தம் 477 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாக சாதனை படைத்துள்ளான்.

பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவன் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவனுக்கும், மாணவனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *