திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலம்பாளையம் ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் கோவிலுக்கு செல்லும் வழியை ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுத் தரக் கோரியும் கோட்டாட்சியர் செந்தில் அரசின் இடம் ஆலம்பாளையம் ஊர் பொதுமக்கள் 50,பேர் மனு கொடுத்தனர்.

அந்த மனதில் கூறியுள்ளதாவது:-

தாராபுரம் வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், சுமார் 23 சென்ட் பூமியில் 25,அரிஜன குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வந்தார்கள். இந்த பகுதி நீர்ஓடையாக இருப்பதால் அரசாங்கத்தால் மாற்றிடம் வழங்கப்பட்டு அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டு கடந்த 20, ஆண்டுகளாக அந்த இடத்தில் வசித்து வருகிறார்கள். அவர்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்த கோவில் மற்றும் அதன் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளாக இந்த பகுதி பயன்பட்டு வந்தது.

இந்த நிலையில் திருச்சி காட்டூர் பகுதியில் வசிக்கும் வேலுமணி என்பவர் பெல் நிறுவனத்தில் வேலை செய்து தற்பொழுது ஓய்வு பெற்று ஒய்வூதியம் பெறும் நிலையில் இந்த 22.50 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு நிபந்தனை பட்டா பெற்றதாகவும், இந்த பகுதி முழுவதும் எனக்கு சொந்தம் எனக்கூறி சில மாதங்களாக ஜாதி இயக்க கட்சிகளுடன் இணைந்து கொண்டு அந்த பகுதியை பயன்படுத்தும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கோவிலில் வழிபாடு செய்ய இடையூறு செய்யும் வகையிலும், தனது ஜாதியின் பெயரைக் கூறி மிரட்டியும், பல இடையூறுகளை செய்து வருகிறார்.

மேலும் அதே பகுதியில் பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர் வேலுமணிக்கு 1.50 ஏக்கர் பூமி சொந்தாக உள்ளது. இந்த நிலையில் மேற்படி 22.50 சென்ட் நிலத்தை தவறான தகவலைக்கூறி நிபந்தனை பட்டா பெற்றுள்ளதால் மேற்படி
சம்பந்தப்பட்ட வேலுமணியை நேரில் விசாரித்து கண்டிசன் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கொளத்துப்பாளையம் பேரூராட்சி திமுக’ செயலாளர் கே.கே. துரைசாமி, தெரிவிக்கையில்:-

ஆலம்பாளையம் கிராமத்தில் திருச்சி ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர் வேலுச்சாமி என்பவர் ஹரிஜன காலனி பகுதியில் உள்ள இரண்டு கோவில்களுக்கு செல்லும் வழித்தடங்களை ஆக்கிரமித்தும் ஊர் பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தும் வருகிறார் மேலும் இது குறித்து அவரிடம் ஊர் பொதுமக்கள் கேட்டபோது தமிழ் புலிகள் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு ஜாதியின் பெயரை சொல்லி பி.சி.ஆர் வழக்கு போட்டு விடுவேன் என ஊர் பொதுமக்களை மிரட்டுகிறார் எனவே கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *