மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மா வினோத் ராவ் மாநில இளைஞரணி தலைவர், மாவட்ட தலைவர் திரு. சரவண பாரதி, TD ராஜ்குமார் ராவ் மாவட்ட பொதுச்செயலாளர், M.கிருஷ்ணகுமார் மாவட்ட ஆலோசகர், மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி .ஜெய் வெங்கடேஷ், திருச்சி மாவட்ட தலைவர் த செல்வராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் .சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்க்கு மாமன்னன் ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும், பெரிய கோயில் அருகிலேயே ஆயிரகணக்கான வாகனங்களும், பேருந்துகளும் மேம் பாலத்தில் செல்வதால் அதிர்வின் காரணமாக வரும் காலங்களில் பெரிய கோயில் சிதலம் அடைய வாய்ப்புள்ளது பெரிய கோயில் அருகில் மேம் பாலம் கட்டியது தொல்லியல் துறை சட்டத்திற்கு எதிரான செயல் எனவே மத்திய, மாநில அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பாக கேட்டு கொள்கிறேன்