கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாட படுகிறது இறந்த ஆன்மாக்களை நினைத்து அவர்களை போற்றி வழிபடும் விழாவானது ஆண்டு தோறும் கொண்டாட படுகிறது
கல்லறைகள் புதர்கள் மண்டியும் முட்செடிகள் வளர்ந்தும் உள்ளதால் அவற்றை அகற்றி சுத்தபடுத்தும் பணியில் வடக்குபாளையம் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் அருள்ஜோசப் மற்றும் கிராம மணியம். மணி (எ ) செல்வராஜ். ராஜ். சகாயராஜ் மற்றும் முன்னால் மணியம் மற்றும் இந்நாள் மணியம் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதலுடனும் தூய்மை பணியாளர்கள் எல்லோரும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தும் இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறையினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள் அருட்தந்தையும் மறைவட்ட அதிபருமான திரு அகஸ்டின் உதவி பங்குதந்தை வால்லேட் ஆகியோர்களால் கல்லறை மந்திரிக்க பட்டு சிறப்பு திருப்பலி நடைபெறும்