கடலூர் மாவட்டம் வடலூர் கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்,இவர் கத்தாரில், பணிபுரிந்து வருகிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த போது,
இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருந்ததை ராஜேஷ் அப்பகுதியினர்
கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
அப்பகுதியினர் உடனே குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் சிவக்கொழுந்து நிலைய போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மற்றும் தீயணைப்பு வீரர்கள்அருள்செல்வம் ,
தமிழரசன் ஆகியோர் சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.