போடி நாயக்கனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் வார்டு சபா கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டுகள் 5,21,29,20,31,32, 33 வார்டுகளில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி முன்னிலையில் நடைபெற்ற வார்டு சபா கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவர் எம் சங்கர் மேலாளர் ஜலாலுதீன் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி சபீர் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்