திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பும்
காட்சி படுத்துதலும் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் தலைப்பில் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிகழ்வில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் தலைப்பில் பயிற்சி பட்டறையில் லால்குடி விஜயகுமார் இந்தியாவின் முன்னோடி, இளம்வழுதி, சிவக்குமார் உள்ளிட்டோர் குழந்தைகள் தினம் தலைப்பிலும் காட்சி ப்படுத்தி விளக்கினர்.
அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து விஜயகுமார் பேசுகையில்,அஞ்சல் தலை என்பது அஞ்சல் சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியதற்கான சான்றாகப் பயன்படுத்தப்படும் ஒட்டுத் தாளாகும். இது வரலாற்றுக் கதைகள், கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும்.அஞ்சல் தலை சேகரிப்பு கலையானது வரலாற்றுப் பொக்கிஷமாகும், ஏனெனில் ஒவ்வொரு தபால்தலையும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாறு, கலாச்சாரம் அல்லது நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது.
இது உலகெங்கிலும் பலரால் விரும்பப்படும் ஒரு பொழுதுபோக்காகும்.சில அஞ்சல் தலைகள் மதிப்பு மிக்கவையாக இருக்கலாம்.அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வத்தை வளர்க்க, தபால் சேகரிப்பு சங்க கூட்டங்களிலும் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படிக்கலாம் தபால்களை சேகரிக்க, அஞ்சலகங்கள், அல்லது பல்வேறு நிறுவனங்களிடம் இருந்துபெறலாம்.
அஞ்சல்தலை சேகரிப்பு மன்றங்கள் அல்லது குழுக்களில் இணைந்து மற்ற சேகரிப்பாளர்களுடன் தொடர்பில் இருக்கலாம். ஒரு தபால்தலையின் மதிப்பானது குறைவாக அச்சிடப்பட்டு சேதமடையாமல் நல்ல நிலையில் உள்ள தபால்தலைகளின் மதிப்பு அதிகம்.வரலாற்று முக்கியத்துவம்:
முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய தபால்தலைகள் அதிக மதிப்புடையவையாக இருக்கும்.சேகரிப்பாளர்கள் மத்தியில் அதிகத் தேவை உள்ள தபால்தலைகளின் மதிப்பு அதிகமாக இருக்கும். எனவே கருப்பொருளுக்கு தேவையான பொது பயன்பாட்டு அஞ்சல் தலை, நினைவார்த்த அஞ்சல் தலை, குறுவடிவ அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல் முத்திரைகள் கொண்டு கருப்பொருளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், அன்பழக பாண்டியன், அந்தோணி ஜோசப் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.