வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 300மனுக்கள் ஏற்றுக்கொள்ள நிலையில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 72 வருவாய் கிராமங்கள் உள்ளது. 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
விஜயன் தலைமையில் மூன்று நாட்கள் நடைப்பெற்றது. முதல் நாளில் ஆவூர் உள் வட்டத்தைச் சேர்ந்த 31 வருவாய் கிராமங்களுக்கும், இரண்டாம் நாள் வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த 17வருவாய் கிராமங்களுக்கும், மூன்றாம் நாள்ஆலங்குடி உள் வட்டத்தைச் சார்ந்த23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைப்பெற்றது.

கடந்த மூன்று நாட்களில் ஜமாபந்தி யில் 300 மனுக்கள் வரப் பெற்றன. பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற
முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், பட்டா கோருதல் உள்ளிட்ட 300 மனுக்களும் ஏற்றுக் கொண்ட நிலையில் 14மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அன்பழகன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவகி, மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், மற்றும் வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *