திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் மகேஷ், அங்கன்வாடி மாவட்ட செயலாளர் பிரேமா, மாவட்ட பொருளாளர் கலையரசி, மாவட்ட இணை செயலாளர் சாரதா, மாவட்ட துணைத் தலைவர் சித்ரா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் எப் ஆர் எஸ் செயலி மூலம் கணக்கெடுப்பு பணி பார்த்துக் கொண்டு இருந்த அங்கன்வாடி பணியாளரை, பயனாளரின் கணவர் கடுமையாக தாக்கி செல்போனை பிடுங்கி உடைத்து விட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே பணியாளரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடுமையான பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றும் பணியாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், எப் ஆர் எஸ் முறையினை கைவிடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் வட்டார செயலாளர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.