எண்ணூர் மேம்பாலம் அருகே எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் மற்றும் உதவி ஆணையர் வீரகுமார் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அத்திப்பட்டு புது நகர் வழியாக ஆட்டோ ஒன்று வந்ததை யடுத்து அதனை மடக்கி பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தபோது அவர்கள் முறையாக பதில் அளிக்காத நிலையில் ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா மூட்டை இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்து ஆட்டோவில் வந்த பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
பிரபல கஞ்சா வியாபாரி ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சித்ரா 35, மற்றும் நீலாங்கரையை சேர்த்த கேசவன் 25, பாலவாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதவன் 25, ஆகிய மூன்று பேரை கைது செய்து நான்கு கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து மூன்று பேரை சிறையில் அடைத்தனர்
பின்னர் வாகன சோதனையில் ஈடுபட்டு நான்கு கிலோ கஞ்சா மற்றும் 3 பேரை கைது செய்த எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் கோவிந்த், குருநாதன், முகமது அலி, கண்ணன், ஆகிய காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்