தாராபுரம் செய்தியாளர்
பிரபு
செல்:9715328420
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் – தாராபுரத்தில் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள குமரன் அரங்கில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விவசாயிகள் உரிமை மீட்பு, கடன் விடுதலை முதல் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், கறிக்கோழி பண்ணை செயலாளர் ஏபிடி மகாலிங்கம், உழவர் சந்தை அணி மாநில செயலாளர் ரமேஷ், மாநில நிதிக்குழு தலைவர் கோனார்பட்டி பாலசுப்பிரமணியம், மகளிர் அணி சித்ரா, லீலாவதி, ஒன்றியச் செயலாளர் கணேசன், குமரேசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து 75,000 விவசாயிகள் ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே டிசம்பர் 28, 2025 அன்று நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் யாரை விவசாயிகள் முடிவு செய்கிறார்களோ, அவரே எம்எல்ஏ ஆவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளதாகவும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்:
அனைத்து பயிர், நீண்டகால, மத்தியகால, டிராக்டர் கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு ரூ.30,000 டற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இனாம் நிலங்களின் உரிமை விவசாயிகளுக்கு உறுதி செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
தென்னை, பனை கள் தடையை நீக்க வேண்டும்.
பாமாயிலுக்கு பதிலாக நியாய விலை கடைகளில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000, கரும்பு டன்னுக்கு ரூ.5,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விலை வழங்க வேண்டும்.
மாட்டுப் பாலுக்கு ரூ.50, எருமை பாலுக்கு ரூ.75 நிர்ணயம் செய்ய வேண்டும்.
காட்டு பன்றியை கட்டுப்படுத்த சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தோரின் இழப்பீட்டை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.
மயில், மான், யானை, குரங்கு தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
உயர்மின் கோபுரங்கள் புதைவடங்களாக அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு 100% இழப்பீடு வழங்க வேண்டும்.
பிஏபி, அமராவதி, நல்லதங்காள் ஓடை, உப்பாறு அணை உள்ளிட்ட பாசனத் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த விவரங்களைத் தெரிவித்த நிதிக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், “விவசாயிகளின் நலனுக்காகக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது,” என்றார்.