எண்ணங்களை நேர்மறை ஆக்குங்கள்

வெற்றி எளிதாகும்

போலீஸ் ஐபிஎஸ் மாணவர்களுக்கு அறிவுரை

அரசுப் பள்ளியில் படித்து ஐபிஎஸ் ஆனேன்

போலீஸ் ஏஎஸ்பி பெருமிதம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி ஏ எஸ் பி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

                           ஆசிரியை செல்வ மீனாள் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் மாணவர்களிடம் கலந்துரையாடி பேசும்போது, காலையில் எழுந்தவுடன் அனைவரும் நன்றாக படிக்கவேண்டும். மாலையில் அவசியம் ஏதேனும் ஒரு விளையாட்டினை விளையாட வேண்டும்.

                          காலையில் படிப்பதனால் மனத்திறனும் , மாலையில் விளையாடுவதால் உடல் திறனும் நன்றாக இருக்கும். மனத்திறனும், உடல் திறனும் இணைந்து இருந்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும். அதனுடன் கடின உழைப்பும் அவசியம் வேண்டும்.

                          தோல்வியில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலமாக விடா முயற்சி எடுத்து நாம் வெற்றி அடைய வேண்டும்.

                          முதலில் நம்மால் முடியும் என நாம் நம்ப வேண்டும். அதுதான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் நமக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.

              போதைப்பொருள் பயன்படுத்துவோரை எச்சரிக்கை செய்யுங்கள். போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை சொல்லுங்கள். 

                            அனைவரும் இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி செயல்படுங்கள். கடின உழைப்பு, தன்னம்பிக்கை ,விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்று பேசினார்.

                   மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஏராளமான பெற்றோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

                     ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *