நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையின் சார்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய 4வது சர்வதேச கருத்தரங்கம் இன்று நடைபெற்றது .

இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர் .

துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குனர் டாக்டர் நிவேதா கிருபாநிதி நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா வரவேற்புரை வழங்கினர் .சர்வதேச கருத்தரங்கு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆசிய பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மலேசியா முனைவர் செல்வகுமார் சாமுவேல் பேசும் போது :-

இன்றைய நவீன உலகில் ஆராய்ச்சி என்பது நுண்ணிய ஆராய்ச்சியாக இருக்க வேண்டும் செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு செயலை மட்டும் செய்வது அல்ல பல திறமைகளை ஒருங்கிணைத்த ஒரே செயல் ஆகும் எனவே மாணவிகள் அறிவியல் தொழில் நுட்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய தொழில்நுட்பங்களை சார்ந்த புதிய உற்பத்திகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தான் மிக முக்கியமானது புதிய கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி ஆராய்ச்சிகளே பயனுள்ளதாக இருக்கும் அந்த மாதிரி ஆராய்ச்சிகள் மட்டுமே தற்போது டிஜிடல் உலகில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதற்கு இந்த 4.0 சர்வதேச கருத்தரங்கம் மிக உறுதுணையாக இருக்கும் என்றும் அப்போது மலேசியா முனைவர் செல்வகுமார் சாமுவேல் கூறினார்

மேலும் இக் கருத்தரங்கு விழாவில் பிற மாநிலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றன மாணவ மாணவிகள் சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கருத்தரங்கில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ,அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ குமரவேல் மற்றும் துறைத் தலைவர் ரமேஷ் பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் பேராசிரியர் த ஸ்ரீதர் ராஜா செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *