Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள், “தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்” என்கிறார். சேலம் ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற விழாவில் சிறப்புரை! 

உலகளவில் சுமார் 1,00,000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட DreamDaa, தனது கனவை நனவாக்கும் முயற்சியின் ஒரு மைல்கல்லாக சேலத்தில் உள்ள ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தங்களது நிறுவனத்தின் சேவையைத் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 1,000 மாணவர்கள் ஒரு வருட காலத்தில் (இரண்டு செமஸ்டர்கள்) ஆங்கில மொழிப்பயிற்சி பெற இருக்கிறார்கள். இப்பயிற்சிக்கான தொடக்கவிழாவில், தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கு ஊக்கமளிப்பதில் முன்னோடியாகத் திகழும் Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள் உரையாற்றி அனைவருக்கும் உத்வேகமளித்தார்.  

சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் தொடக்க நிறுவனமான DreamDaa, தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை சரளமாகப் பேசுவதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் பயிற்சிகளைத் தமிழ் மொழியிலும் கொடுத்து ஆங்கிலத்தைப் பேசவும், எழுதவும் தெளிவாகக் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், “தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான ஆங்கிலக் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.  

செயற்கை நுண்ணறிவையும் உபயோகித்து உருவாக்கப்பட்டுள்ள கற்றல் தளம் மாணவர்கள் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும், கற்றுக்கொள்வதற்கு எளிதாக இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் மாணவர்கள் ஆங்கில வழியில் பாடம் கற்ற மாணவர்களுடனும் எளிதாகப் போட்டியிட முடியும். தமிழ்நாடு அறக்கட்டளையின் “ஐடியா பட்டறை” முயற்சியின் கீழ் இது சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

DreamDaa கல்லூரிகளுடன் இணைவதன் முக்கிய நோக்கம், “மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வேலைக்கான நேர்காணல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும்” என்பதே. மேலும், இளம் வயதிலேயே தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது. 

DreamDaaவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள் கூறுகையில், “மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு அதிக நம்பிக்கையைக் கொடுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால் அவர்கள் உலகளவில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். அனைவருக்கும் சமமான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுப்பதன் சக்தியை நாங்கள் நம்புகிறோம். இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 1,00,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை உறுதியாகக் கொண்டுள்ளோம்” என்றார். 

iSource நிறுவனர், CEO மற்றும் DreamDaa வின் இயக்குநர்களில் ஒருவரான திரு.சிவகுமார் சடையப்பன் கூறுகையில், “பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வகங்களில் DreamDaa பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆங்கிலத்தைப் பயிற்சி செய்வது நமது சமூகத்தில் மாணவர்கள் ஆங்கிலம் கற்கத் தயங்குவதற்கான தடைகளை நீக்குகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1000 மாணவர்களிடத்தில் நாங்கள் இதனை நேரிடையாகக் கண்டுள்ளோம்” என்றார். சேலம் – ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களுக்கு முன்னதாக திருநெல்வேலியில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரிகளில் DreamDaa தனது முதலாவதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இப்போது சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *