திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் இன்று (18.11.2025) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை துணை மேலாளர் (பணியாளர்) ஆர். இராமநாதன் தலைமையில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், “இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு என்பதால், போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தில் அனைவரும் பங்கெடுத்து, குடும்பத்திலும் சமூகத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
நமது மாவட்டம் போதைபொருள் இல்லாத மாவட்டமாக உருவாவதற்கு ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.விழாவில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன், புகழேந்தி ராஜ் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்