எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.56. விவசாய தொழிலாளி. இவர் இன்று சைக்கிளில் கதிராமங்கலம் கிராமத்திற்கு வந்துவிட்டு ஊர் திரும்பி உள்ளார் அப்போது கதிராமங்கலம் கடைவீதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பாலு காயம் அடைந்தார் அப்போது அவ்வழியே வந்த பிற்படுத்தப்பட்டோர்

நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் காரை நிறுத்தி காயமடைந்த பாலுவை மீட்டில் தன்னுடன் வந்த காரில் ஏற்றி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்

பின்னர் டாக்டர்களை அழைத்து உரிய சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தி சென்றார். அமைச்சரின் இந்த மனிதநேயமிக்க செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *