உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :- தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி. தொழில்துறையில் 13வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளோம். தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.

புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிறுவனம் தொடங்கினால் மானியம் அளிக்கப்படுகிறது. மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *