செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி
ஆலயத்தில் நாளை கூட்டு பிராத்தனை மற்றும் திரிஷதி அர்ச்சனை நடைபெற உள்ளது.
நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு, ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி மூர்த்தி மீண்டும் ஆலயம் அமர்ந்து அருளாட்சி
புரிய வேண்டி மாபெரும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
அச்சமயம் கந்த சஷ்டி கவசம் மற்றும் மகான் ஶ்ரீ ல ஶ்ரீ முத்துசுவாமிகள் அருளிய மஹா மந்திரமான ஓம் சக்தி சரவணபவ மந்திரத்தை 108 முறை ஓதி முருகப் பெருமானை வழிபட உள்ளனர்.அதன் பின்பு சுவாமிக்கு திரிஷதி அர்ச்சனை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் வந்து கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள நடுபழனி ஸ்ரீ முருகன் அறக்கட்டளை சார்பில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.