S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
காரைக்கால் அன்னை ஜுவைரியா (ரலி) பெண்கள் அரபி பாடசாலை சார்பில், காரைக்கால் முஹியத்தீன் பள்ளி சமுதாயக் கூடத்தில் மீலாது நபி விழா நடைபெற்றது.
நல்லம்பல் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அக்பர் சித்திக், அம்பகரத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து “இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கல்வியின்மையா? ஒற்றுமையின்மையா?”என்ற தலைப்பில் மாணவியரின் பட்டிமன்றமும், உலகம் முழுவதும் நிம்மதியும், பாதுகாப்பும், சமாதானமும் நிலவ வேண்டி நபிகள் நாயகம் (ஸல்) மீது ஒரு கோடி ஸலவாத் மஜ்லீஸ்-ம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகர்கள், பாடசாலை முதல்வர், பேராசிரியர்கள், ஆலோசனை குழுவினர், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.