தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்!
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – பூத் கமிட்டி அமைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தாராபுரத்தில் உள்ள தேர்தல் பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அருண்ராஜ், முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 120 நாள் சாதனைகள் குறித்தும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் அவர் பேசினார். தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதுடன், நிர்வாகிகள் தங்களுக்கான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைகள் பரிமாறப்பட்டன.