தேனியில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வர் விஜய் வருகின்ற செப்டம்பர் 22 09.2026 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடைந்திடும் வகையில் காமராஜர் காலை உணவத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்கள் தேனி அல்லி நகரம் போடிநாயக்கனூர் செல்வி எஸ். பார்கவி பெரியகுளம் தமிஹா சுல்தானா கம்பம் சின்னமனூர் உமா சங்கர் கூடலூர் கிருஷ்ணமூர்த்தி பேரூராட்சி செயல் அலுவலர்கள் வடுகபட்டி கல்பனா தேவி தென்கரை குச்சனூர் சின்னசாமி பாண்டியன் தாமரைக்குளம் செ. முருகன் பூதிப்புரம் தேவதானப்பட்டி ராஜேஷ் அய்யனார் முருகன் பழனி செட்டிபட்டி மீனாட்சிபுரம் யோகஸ்ரீ மேல சொக்கநாதபுரம் மணிகண்டன் தேவாரம் பாலசுப்பிரமணியன் வீரபாண்டி பண்ணைப்புரம் சா. இளங்கோவன் கோம்பை இரா சுருளி வேலு ஹவேவிஸ் அனுமந்தன்பட்டி சீனிவாசன் மார்க்கையன்கோட்டை சிலம்பரசன் ஓடைப்பட்டி அ. சுதா ராணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்