எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கே சித்திரை தேர் பெருவிழா பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 24.4.23 அன்று கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி தினம்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களால் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினந்தோறும் சுவாமி திருவீதி உலாவில் மயில்வாகனம் பூத வாகனம் சிம்மவாகனம் ரிசப வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் புஷ்பரதம் போன்ற பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் தர்ம சம்பர்த்தினி ஸ்ரீ கைலாசநாதர் திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் சாமி திருவீதி உலாவும் மற்றும் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்று முடிந்தது. 14.நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று தொடர்ந்து சப்தாபரணம் நிகழ்வில் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரணை காட்டப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையை ராசிபுரம் கவரை தெரு கௌரவ பலிஜா நாயுடுகள் சமூகம் என். கமலம் நீலா கிருஷ்ணன் சிறப்பாக செய்தனர்.

மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் வசந்தஉற்சவம், மஞ்சள் நீராடல் உடன் விழா நிறைவடைகிறது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *