அலங்காநல்லூர்,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில், அதிமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார். நகர் செயலாளர்கள் குமார், அழகுராஜ், முன்னிலை வகித்தனர்.

முகாமினை முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், எம் எல் ஏ.தொடங்கி வைத்து உறுப்பினர் படிவங்களை வழங்கிய பின், நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பிறந்த நாள் விழாவை திராவிட இயக்க எழுச்சி நாளாகவும், ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இளைஞர்கள் எழுச்சி பெருவிழாகவும் நடத்தி வருகிறோம்.

அதனைத் தொடர்ந்து ஒன்னரை கோடி தொண்டர்களால் கழகப் பொதுச் செயலாளராக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எடப்பாடியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் மே 12ம் தேதி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திருவிழாவாகவும், கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு பாண்டி கோவிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தற்போது திமுகவின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது. அதை சரி செய்ய அமைச்சரவை மாற்றத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் அமைச்சரவைமாற்றம்என்பது
கண்துடைப்பு நாடகமாகும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய கிராமங்களில் தொன்று தொட்டு வாடிவாசலில் தான் நடைபெற்றுவருகிறது.அந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு வாடிவாசல் மூடப்படுமா என்று மக்கள் இன்றைக்கு அச்சப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு மைதானத்தைக் கட்ட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது, அதை காரணம் காட்டி,பாரம்பரியமாக, கிராம தேவதை வணங்கி, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமல், வாடிவாசலுக்கு மூடுவிழா நடந்தால் மக்களிடம் இருந்து கடும் கொந்தளிப்பை திமுக சந்திக்க வேண்டியது வரும். வாடி வாசலை மூடு விழா காண நினைத்தால் எடப்பாடியார் அனுமதி பெற்று அதிமுக சார்பில் தமிழக முழுதும் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்.
இன்றைக்கு கலைஞர் நூலகம், கலைஞருக்கு பேனா அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்கப்படுவதற்கு பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இது குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடியார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு கமிஷன் அமைக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்க வழிவகை செய்யவில்லை.கடந்த அம்மா ஆட்சி காலத்தில் ரூ 22 கோடி வரை சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஆலை இயங்கி வந்தது.

சித்திரை திருவிழா குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசப்பட்டது. ஆனால் தற்பொழுது 5 உயிர்கள் பலியாகி உள்ளன.அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. ரவுடி கும்பலால் பெண்களின் தாலி உட்பட மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தினகரன், பன்னீர்செல்வம் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். எடப்பாடியார் தலைமையில் ஒன்னரை கோடி தொண்டர்களும் மற்றும் புதிதாக தங்களை இணைத்துக் கொண்ட 50 லட்சம் தொண்டர்களும் எடப்பாடியார் என்னும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்று கொண்டிருக்கிறார்கள். என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் . கருப்பையா, சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், காளிதாஸ், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாலமேடு பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலெட்சுமி ராஜேஷ்கண்ணா, .புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லெட்சுமி, எம்ஜிஆர் இளைஞர் அணி எம்.எஸ்.சுந்தரம்,
முடுவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நகர இணைச் செயலாளர் புளியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீ சுதாமுருகன், செல்வராணிசிதம்பரம், சின்னம்மாள்பெருமாள், தீபாநந்தினிமயில்வீரன், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செந்தில்குமார், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ்சந்தர், பொதும்பு கூட்டுற வங்கி தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமாரம் மூர்த்தி, நகர மாவட்ட பிரதிநிதி கேட்டுகடைமுரளி, மனோகரன், பாலன், மற்றும் பெரிய இலந்தகுளம் கிளை செயலாளர்கள் ஜெகதீஷ், செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் செந்தில், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *