புதுச்சேரி முருங்கப்பாக்கம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ நான்காம் நாள் விழாவை புதுச்சேரி சான்றோர் குல மரபினர் கிராமணியார் நாடார் நடத்தினர்.இந்த அர்ஜுனன் தபசு விழாவில் ஆளுநர் தமிழிசை பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24 ஆம் தேதி காலி அழைத்தல் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் மற்றும் மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த நிலையில் நான்காம் நாள் திருவிழாவாக புதுச்சேரி சான்றோர் குல மரபினர் கிராமணியர் மற்றும் நாடார் நடத்தும் அர்ஜுனன் தபசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஆளுநருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது.

இதனை ஒட்டி வியாழக்கிழமை பகல் 10:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் முத்தால் வராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இரவு 7 மணி அளவில் புதுவை மற்றும் தமிழக புகழ்பெற்ற சிகரம் திரையிசை குழுவினருடன் திரைப்பட பின்னணி பாடகி சின்னப்பொண்ணு பங்கு பெறும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

இதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஏற்பட்டளர்கள் விழா குழுவினர்
கௌரவ தலைவர்கள் சகாதேவன், சேகர், புண்ணியமூர்த்தி, ஜெயராமன், சிவக்குமார், மற்றும் விழா குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, செயல் தலைவர்கள் மதிவாணன், மோகன்ராஜ், ஆறுமுகம், துணை தலைவர்கள் மருது.வடிவேல் வெங்கடாசலபதி, கணபதி, செயலாளர் அறிவழகன், முரளிதரன், பொருளாளர் பிரகாஷ், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் பொருளாளர்கள் என அனைவரும் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *