திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி திறந்து வைத்தார்

தமிழக வெற்றி கழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் அலுவலகம் திறப்பு விழா, திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண் மற்றும் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் உசேன் ஆகியோர் தலைமையில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அலுவலகத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு புடவைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் முக்கிய அறிவிப்பும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 24, 25, 26 மற்றும் 27-வது வார்டுகளில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சார்ந்த ஜெராக்ஸ் பிரதிகள் மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து மேற்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நகர செயலாளர்கள் விமல் மற்றும் பைரோஸ் கான், நகர துணை செயலாளர் நாசர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நஃபீஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட மாவட்ட, நகர மற்றும் வார்டு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *