ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிர் இழந்துள்ளனர். சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிருக்கும் போராடும் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்சிலர் இறந்தும் விட்டனர்பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது

இறந்தவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய் 10 இலட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்குவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார்

மக்களின் வரிப்பணம் இப்படிக் குடும்பப் பொறுப்பு இல்லாமல் ஊதாரித்தனமாகக் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறதே என்று மக்கள் கொதித்துக் கொண்டிருக்கும் போது முதல்வர் குடிகாரர்களை நேரில் போய்ச் சந்தித்தது மிகப்பெரும் வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது

தற்போது முதல்வர் ஓடோடிச் சென்று பார்வையிட்டதால் நல்ல சாராயம் அரசு அனுமதி பெற்றும் கள்ளச்சாராயம் அதிகாரிகளின் அனுமதி பெற்றும் இலஞ்சம் கொடுத்தும் திமுக வினர் தான் காய்ச்சுகிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது

மக்கள்மீது அக்கரை இருந்தால் கள்ளச்சாராயம் காசுபவர்களிடம் இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்கப்படும் நடைமுறையை ஒழிக்க அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எனும் போது அதை முற்றிலும் ஒழிக்க இதுவரை திராவிட மாடல் அரசு கையில் எடுத்த செயல் திட்டம் என்ன ?

குடும்பத்தலைவன் பணிக்குச் சென்று திரும்பும் நேரத்தில் திடீர் விபத்தில் இறந்து விடுகிறான் பொறுப்பாகச் செயல்பட்ட அவனின் குடும்பத்தார் நிர்க்கதியாக நிற்கும் நேரத்தில் கூட இது போன்ற அறிவிப்பை அரசு செய்ததில்லையே?

மக்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு என்று பேசிவிட்டு சாராயக் கடைகளைத் திறந்து வைப்பது என்ன நியாயம் ?

கள்ளச்சாராயத்தை தடுக்க கூடிய அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றிப் பூரண மதுவிலக்கை நிறைவேற்ற அரசு திட்டமிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *