எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

ராசிபுரம் அருகே கட்டிட மேஸ்திரிக்கு பாக்கி 10 லட்சம் பணம் தராமல் விரட்டியடித்த தருமபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் கணவன் மற்றும் 4 மாத கர்ப்பினி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி…விஷம் குடித்ததால் கருவில் இருக்கும் நான்கு மாத பச்சிளம் குழந்தை பாதிப்பு.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கட்டிடம் மேஸ்திரி சதீஷ்குமார் மற்றும் அவருடைய மனைவி ஷாகிலா கொடுத்த புகாரின் மீது நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(கட்டிட மேஸ்திரி) மனைவி ஷாகிலா (சிட்டால்) 3 வயது மிதுன் என்ற மகனுடன் வசித்து வருகின்றனர். சதிஷ்குமார் மேஸ்திரி புதிய வீடு காண்ட்ராக்ட் எடுத்து கட்டிதரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஒசூரில் ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சாக்கன் என்பருக்கு 27 லட்சம் மதிப்பில் 3 மாடி கொண்ட புதியவீடு கட்டித்தர ஒப்பந்தம் போட்டு கட்டியுள்ளார்.


மேலும் சாக்கன் ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிடதா கூடுதலாக 4 மாடிவீடாக கட்டிதர சொல்லியுள்ளார். ஒப்பந்தத்தின் படி 3 மாடி கட்டிடமே கட்டித்தர முடியும் என மேஸ்திரி சதீஷ்குமார் வாக்குவாதம் செய்த நிலையில் கூடுதலாக கட்டப்படும் கட்டிடத்திற்கு பணம் கேட்டபோது வீடு கட்டியபின் தருவதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சாக்கன் உறுதி அளித்துள்ளார்…

எனவே சதிஷ்குமார் மனைவியின் தங்க தாலி, செயின் மற்றும் நிதி நிறுவனத்தில் கடன் என 10 லட்சம் வாங்கி வீட்டை கட்டியுள்ளார்.

பின்னர் ஒய்வு பெற்ற காவல் அதிகாரியிடம் பணம் கேட்டபோது தரமுடியாது எனவும் நான் உன்னிடம் கட்ட சொல்லவில்லை எனக்கு தெரியாது எனகூறி பணம் தர மறுத்துள்ளார்.

ஒசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பதால் நடடிக்கை எடுக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததால் சதிஸ்குமார் 4 மாத கர்பினி மனைவி ஷாகிலா உள்ளிட்ட இருவரும் விஷம் அருந்தி தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கருவில் உள்ள நான்கு மாத குழந்தை விஷம் குடித்ததால் மூளை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எக்ஸ்ரே எடுத்த பின் கருவை கலைப்பதே நல்லது என கூறியுள்ளனர்.

இது குறித்து கணவன் மனைவி கூறுகையில் – ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சாக்கன் 10 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். கடன் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தை பெற்று தரவில்லை என்றால் மீண்டும் குடும்பத்துடன் தற்கொலை செய்வது தவிர வேறு வலியில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓசூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்,சென்னை டிஜிபி அலுவலகம் முதல்வரின் தனிப்பிரிவு என அனைத்து துறைகளுக்கும் புகார்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *