புதுச்சேரி முழுவதும் துணை பேருந்து நிறுத்தம் மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடையோடு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசின் அனுமதியின்றி நிழற்குடையில் தனியார் விளம்பரங்கள் பதிவு செய்து சிறிதும் அச்சமின்றி பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விரைந்து தனியார் விளம்பரங்களை அகற்றிவிட்டு மக்கள் பயன்பெறுகின்ற அரசு விளம்பரங்கள், மது குடிப்பதனால் வருகின்ற கேடுகள்,புகைபிடிப்பதனால் வருகின்ற பாதிப்புகள், அருகில் இருக்கின்ற காவல் நிலையம், நீதிமன்றம், மருத்துவமனை, சுற்றுலாத் தளங்கள், தொடர்வண்டி நிலையம், பயணத்தின் தூரங்கள் தொடர்பான பதிவுகள், அனைத்துத் துறை அரசின் தொடர்பு எண்கள், அரசுத் தொடர்பான இடங்களில் அரசே இதுபோன்ற விளம்பரங்களை மக்கள் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்ய வேண்டும்.

அரசின் அனுமதியின்றி தனியார் விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித் துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் தொடர்பான அலுவலக அதிகாரி துணை பொறிஞர் திரு.கார்த்திகேயன் அவர்களிடம் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் நிறுவனர் இரா. இராஜா புகார் மனு வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *