அதர்வண காளிஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மகாவேள்வி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஸ்ரீஜிஜி லாஅல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தில் உலக உயிர்கள் இன்புற்று வாழ, நலம் பெற வேண்டி அருள்மிகு அதர்வண காளி ஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மகா வேள்வி நேற்று துவங்கியது.

இவ்வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, பாபாஜியிடம் அனுமதி பெறுதல், கடஸ்தாபனம், வேதபாராயணம், முதற்கால அதர்வணகாளி மஹா ப்ரத்யங்கிரா ஹோமங்கள் த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அதிகாலையில் திருமுறைபாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால அதர்வண காளி மஹா ப்ரத்யங்கிரா ஹோமங்கள் நடைபெற்று பின்னர் கடம் புறப்பாடு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

மகாவேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதன், அகில பாரத துறவிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராமானந்தாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் அப்பாதுரை, நிர்வாகி முத்துராமன் உள்ளிட்ட ஆசிரம சேவகர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

இவ்விழாவில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராம்ராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன், திண்டுக்கல் எஸ்.பி.எம் கல்வி குழும தலைவர் ஜெயராஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர் உத்தமபாளையம் குணசேகரன், கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *