திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை 5.00 மணிக்கு அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தர உள்ள நிலையில்

தொடர்ந்து மாலை 3.00 மணி அளவில் மயில் இரவுண்டானா அருகே I.N.D.I.A. கூட்டமைப்பு சார்பாக சனாதனத்தை ஆதரிக்கும் ஆர்.என். ரவியே திரும்பிச் செல் என்ற முழக்கத்துடன் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து சனாதனத்தை எதிர்க்கும் திமுக, விசிக,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, திராவிட கழகம்,திராவிட விடுதலைக் கழகம்,
பெரியார் திராவிட கழகம்,திராவிட இயக்க தமிழர் பேரவை,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அமைப்பு மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்புக்கொடி காட்ட உள்ளதாக I.N.D.I.A.கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்து வருகின்றனர்..

மேலும் கவர்னர் வருகையொட்டி பழனி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி காட்ட முயல்பவர்களை காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *