எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பெரம்பலூர் நகர் பகுதியிலுள்ள போஸ்ட் ஆபிஸ் கடைவீதி தெருவானது கோடைவெயில் தொடங்கிய நாள்முதலாகவே மக்கள் வரத்து குறைந்து தெருக்கடை வியாபாரிகளுக்கு போதுமான வருமானம் இன்றி அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது கடந்த சில நாட்களாக மழையும் அவ்வபோது பெய்வதால் ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் தங்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக இப்பகுதி தெருக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில ஊர்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது