அதிகரிக்கும் வெப்பநிலையால் வலங்கைமான் பகுதியில் செங்கல் உற்பத்தி மும்முரம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உற்பத்தி ஆகும் செங்கல்லுக்குதஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்டமாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்,நல்ல தரமானதாகவும்நிறத்துடனும், வலிமை ஆனதாகவும் இருப்பதால்அரசு மற்றும் தனியார்கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் செங்கல்லைவாங்கி செல்கின்றனர்.

வலங்கைமான் பகுதியில் குடமுருட்டி ஆறு, சுள்ளன் ஆறுக்கு
இடைப்பட்ட பகுதிகளில்நல்லூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம்,லாயம்,பூண்டி,கீழவிடையல்,மேலவிடையல், நல்லம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தில்லையம்பூர், உடையாளூர், திப்பிராஜபுரம், மாடாகுடி,தேனாம்படுகை உள்ளிட்ட பகுதிகளிலும்செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தற்போது செங்கல் உற்பத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் நேரடியாகவும், 5ஆயிரத்திற்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் கட்டுமான பணிகட்கு கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் வலங்கைமான் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சிலஆண்டுகளாக செங்கல்உற்பத்திக்கு மண் எடுப்பதில் சிக்கல்காரணமாகவும், கடந்தஅதிமுக ஆட்சியில்
பெயரளவிலேயே தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்றதால் செங்கல் தேவைகள்
குறைந்தது.

இதனால்சாலைகளின் ஓரங்களில்குளம், ஆறுகள் உள்ளிட்ட வற்றில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாகசெங்கல் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் அதற்கு பதிலாக தற்போது கருங்கல் ஜல்லிகள் பயன்படுத்தப்படுவதால் செங்கல் உற்பத்தியின் தேவை
குறைந்தது. மேலும் கடந்த ஆட்சியில் மணல்தட்டுப்பாடு பெரிய அளவில் நிலவி வந்த நிலையில் கட்டுமான பணியில் மணலுக்கு மாற்றாகவும் மணல்தேவையை கருத்தில் கொண்டு கட்டுமானத்தில் செங்கல்லுக்கு பதிலாக
வெவ்வேறு கற்களையும்பயன்படுத்தி வந்ததை
அடுத்து செங்கல் உற்பத்தி, விற்பனையில்
தேக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக செங்கல்
உற்பதியும் பாதிக்கப்பட்டது.

மேற்கண்ட பகுதிகளில்வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் செங்கல் உற்பத்திதொடங்குவது வழக்கம்.இருப்பினும் சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் செங்கல் உற்பத்தி, மார்ச் மாதம்துவக்கத்திலேயே வேகம்
எடுப்பது வழக்கம். மார்ச்மாதத்தில் இருந்து ஜூன்மாதம் வரை செங்கல்உற்பத்தி அதிக அளவில்மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் சிலநாட்களாக மழை பெய்ததால் செங்கல் உற்பத்தி துவங்குவதில்
காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது வலங்கைமான்உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வழக்கமான ஜூன் மாதத்தில் முடியும் செங்கல் உற்பத்தி பணிகள், தற்போது ஜூலை, ஆகஸ்ட் இறுதியை எட்டிய நிலையில் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.

போதிய மழை இல்லாததால் வேளாண்மை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுசெங்கல் உற்பத்தி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *