பெரம்பலூர் வைத்தியநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள வைத்தியநாதபுரம்
கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அருகே உள்ள ஆண்டி குரும்பலூர் வேப்பூர் நன்னை, கிளியூர், பெரும்த்தூர், காருகுடி, பெ.குடிக்காடு உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்று நேற்று தேர் முக்கிய வீதி வழியாக உலா வந்தது இந்த ஆண்டு வெகு விமர்சையாக தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது. தேர்திருவிழா ஏற்பாடுகளை கிராமம் கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம பொது மக்கள் ஏற்பாடு செய்தனர்.