நாமக்கல் மாவட்ட பட்டாசு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் இன்று (09.10.2023) மாலை நாமக்கல் குறிஞ்சி மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நவலடி லோகேஸ்வரன் தலைமை வகித்தார் சங்கத்தின் செயலாளர் ஜெயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தற்போது பட்டாசு தொழிலில் உள்ள சிரமங்கள், லைசன்ஸ் பெறும் முறை, கடை உரிமையாளகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், சமீபத்தில் பட்டாசு கடைகளில் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகள் நமது வணிகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனவும்,

இதனால் உரிமம் பெறும் வழிமுறைகளும், பாதுகாப்பு விதிமுறைகளும் மிக கடுமையாக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வெடிபொருள் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும்,

இதில் அலட்சியம் காட்டும் வணிகர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும் எச்சரித்தார்.

நாட்டுவெடி, பாப் பாப் போன்ற வீரியம் மிக்க பட்டாசுகளையும், அரசு தடைசெய்துள்ள பட்டாசு ரகங்களையும் எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் வணிகம் செய்வோம் என அனைத்து வணிகர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்தில் பட்டாசு வணிகர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் கூட்ட முடிவில் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *