தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி மற்றும் மாநாடு ரெஃப்கோல்டு இந்தியா 2023,2023 அக்டோபர் 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இது ISHRAE (தி இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங் ரிப்ஃரிகேட்டிங் அண்ட் ஏர் கண்டிசனிங் இன்ஜினியர்ஸ்) மற்றும் இன்ஃபார்மா மார்கெட்ஸ் இன் இந்தியா வின் ஒரு முன்முயற்சி ஆகும்.

குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி உபகரணங்களுக்கான தென்பகுதி சந்தைகளின் தேவைகளை ஈடேற்றும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சி, சென்னையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இந்த ஒத்துழைப்பு அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல், புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ரெஃப்கோடு இந்தியா 2023, சில்லறை விற்பனை, பார்மா, கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், உறைந்த உணவுகள், உணவு சேவை, பதப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து தொழில்களில் 10,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுடன் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலித் தொழில்களில் முக்கிய பங்குதாரர்களுடன் சர்வதேச சமூகம் ஈடுபடுவதற்கான ஒரு தளமாக இந்த கண்காட்சி செயல்படுகிறது.

ரெஃப்கோல்டு இந்தியா குளிர் சேமிப்பு உபகரணங்கள் உட்பட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது; மொபைல் குளிர்பதன உபகரணங்கள்; ரீடெயில் குளிர்பதன உபகரணங்கள்; உணவு மற்றும் குளிர்பதனக் கருவிகள்; செயல்முறை குளிரூட்டல் உபகரணங்கள்; குளிர் சங்கிலி தளவாடங்கள் மற்றும் மருத்துவ குளிர்பதன உபகரணங்கள் இதில் அடங்கும்.

12, அக்டோபர் 2023 அன்று காலை 10 மணிக்கு இக்கண்காட்சி தொடங்குகிறது. புளூஸ்டார், டைக்கின், ரினெக், யஸ்கவா, டான்ஃபோன்ஸ், கோப்லாண்ட், டெக்கும்ஷேபோன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இது IIR ( இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரெஃப்ரிகேசன் ), NCCD (நேசனல் செண்டர் ஃபார் கோல்டு செயின் டெவலப்மெண்ட்) மற்றும் MOFPI (மினிஸ்டரி ஆஃப் புட் ப்ரோசசிங் இண்டஸ்ட்ரிஸ்) போன்ற மதிப்புமிக்க அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *