எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.

சீர்காழியில் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்பு:

சீர்காழி
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் சதுரங்கபோட்டி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.

இவர்கள் பல்வேறு தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் 12 பேர், மாணவிகள் 12 பேர், என 96 மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய குறுவட்ட பகுதிகளிலிருந்து சதுரங்க போட்டியில் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியானது சர்வதேச விதிகளின்படி கணினி மூலமாக 22 உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் நடுவர்களை கொண்டு நடத்தப்பட்டது. இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்து சபாநாயகர் முதலியார் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்று போட்டியை ஒருங்கிணைத்தார்.

முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் முன்னிலை வகித்தார்.பெஸ்ட் மெட்ரிக் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ் .எஸ் .என். ராஜ்கமல் போட்டிகளை துவக்கி வைத்து ஊக்க உரை வழங்கினார்.

மேலும் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அதித்யாராஜ்கமல், பெஸ்ட் பள்ளியின் நிர்வாக அதிகாரி சீனிவாசன், பெஸ்ட் பள்ளியின் முதல்வர் ராமலிங்கம், துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் குறுவட்ட போட்டி இணைச் செயலாளர் சுதா, திருவெண்காடு சு .சு. தி .மேல்நிலை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செல்லதுரை, எடமணல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிறைவாககுலசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *