மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி….
மதுரையில்தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலம் தெற்கு மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி நடைபெற்றது.

10 மாவட்டங்களைச் சேர்ந்த மதுரை திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் திண்டுக்கல் சிவகங்கை தென்காசி தேனி தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியின் துவக்க விழாவிற்கு தேனி ஆனந்தம் நிர்வாக உயர் அதிகாரிகள் மணவாளன் மற்றும் பிரகாஷ் ,பளு தூக்கும் சங்கத்தை பேராசிரியர் ஆனந்தகுமார்,மற்றும் எஸ்.வி.எஸ் ஃபுட்ஸ் நிர்வாக மேலாளர் சூரத் சுந்தர சங்கரும் பங்கேற்றனர்.

போட்டியானது உடல் எடையின் அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூனியர் சீனியர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிபதி ரஜினி, உயர்நீதிமன்றத் தின் மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, வழக்கறிஞர் திலீப், நடுவர் ரூபேஷ் , பளுதூக்குதல், வலு தூக்குதல் சங்கத்தின் நடுவர், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் பொருளாளர் விஜய் சாரதி, மதுரை மாவட்ட நல்வாழ் சங்கத்தின் தலைவர் பூபதி, மற்றும் லேடிஸ் சர்க்கிள் நம்பர் 8 ன் தலைவர் மதுபாலா ஆகியோர் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ், டீசர்ட் வழங்கி கௌரவப்படுத்தினர்.

145 கிலோ அதிக எடை தூக்கிய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் முருகன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அதிக எடை பிரிவு பெண்கள் பிரிவில் 60 கிலோ எடை தூக்கிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த அருள்மொழி சிறந்த வீராங்கனை யாக தேர்வு செய்யப்பட்டனர்.

இப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் மாற்றுத் திறனாளி வீரர் வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தியான் சந்த் விருதாளர் ரஞ்ஜித் குமார் ஒருங்கிணைத்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *