மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

“ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பிரவீன் சித்திரவேலுக்கு நீடாமங்கலம் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா..”

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை சித்ரவேல் சிறந்த கபடி வீரர் தற்போது விவசாயத்தில் கவனம் செலுத்தி ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் பிரவீன் சித்ரவேல் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷோ நகரில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் தடகளத்தில் டிரிபிள் ஜம்ப் பிரிவின் இறுதி சுற்று போட்டியில் , 17. 13 மீட்டர் தாண்டி சீன வீரர் தங்கப்பதக்கத்தையும், 16. 93 மீட்டர் தாண்டி மற்றொரு சீன வீரர் வெள்ளி பத்தகத்தையும், 16.68 மீட்டர் தாண்டி இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கல பதக்கத்தையும் வென்று சொந்த ஊர் திரும்பிய இவருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பிரவீன் சித்ரவேலுக்கு நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பாராட்டி ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையை பள்ளியின் தாளாளர் நீலன்.அசோகன் வழங்கினார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த பிரவீன் சித்ரவேலுக்கு பள்ளி மாணவியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள் .

நிகழ்ச்சியில் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் நீலன். அசோகன் தலைமை வகித்தார்.

செயலாளர் அ.சுரேன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன், தன்னம்பிக்கை வட்ட மாவட்ட தலைவர் ஜி.குமாரசாமி, மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜாராமன், விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் பிரேமா, சித்திரவேல் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளியின் முதல்வர் சந்தானலெட்சுமி வரவேற்றார். தமிழாசிரியர் குணசீலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் அம்பிகா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *