காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன் கூடல் , ஜம்போடை, மேல் மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5000 கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. மழையில் நினைந்து சேதமான நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை
மேலும் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் இல்லை எனவும் கூறப்படுகிறது
இதே நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு 80 ரூபாய் வசூல் செய்து கொண்டு தான் விவசாயிகளுக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு உள்ளது
இதற்கு ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரும் உடந்தையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் நெல் கொள்முதல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்