தென்னிந்தியாவின் லேசர் தொழில்நுட்பம் கொண்ட கோவை ப்ராட்வே சினிமாஸில் விஜய் நடித்து வெளியாகி உள்ள லியோ படம் காண ரசிகர்கள் ஆர்வம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்த லியோ படம் இன்று வெளியானது.இந்நிலையில் கோவை விமான நிலையம் அருகே உள்ளபிராட்வே சினிமாஸில் உள்ள 9 ஸ்க்ரீன்கள் அனைத்திலும் லியோ வெளியாகி உள்ளது.குறிப்பாக லியோவை கொண்டாடும் விதமாக லியோ டைட்டில் டிசைன் பொறித்த குக்கீஸ் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.லியோவை காண, காலை முதலே ரசிகர்கள் ஆர்வமாக ப்ராட்வே சினிமாஸிற்கு ஆர்வத்துடன் வரத்துவங்கினர்.குறிப்பாக, தென்னிந்தியாவின் முதல் லேசர் தொழில்நுட்பம் மற்றும் EPIQ தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் , ஸ்க்ரீன் இல் லியோவை காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாகவும்,இங்கு ஒன்பது ஸ்கீரினில் லியோ வெளியாகி உள்ள நிலையில் திரைப்படத்தை காண புதிய அனுபவத்தை ப்ராட்வே சினிமாஸ் வழங்கும் என ப்ராட்வே சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சதீஷ் தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *