காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம், அகரபுத்தூர் ஊராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கிராம நிர்வாக அலுவலகத்திற்கான கழிவறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சித்தமல்லி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.5.39 இலட்சம் மதிப்பீட்டில் அம்மன் குளம் புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், தொடர்ந்து பழஞ்சநல்லூர் வீராணநல்லூர் ஊராட்சியில் அயோத்திதாசப் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயநலக் கூடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நபார்டு – RIDF XXVII திட்டத்தின்கீழ் ரூ.562.14 இலட்சம் மதிப்பீட்டில் சர்வராஜன்பேட்டை திருநாதையூர் சாலையில் மனை வாய்க்காலின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், சித்தமல்லி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்கீழ் இயங்கும் சர்வராஜன்பேட்டை நியாயவிலைக் கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கண்டமங்கலம் ஊராட்சியில் ஜல் ஜூவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், கடலூர் மாவட்டம், சித்தமல்லி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.7.83 இலட்சம் மதிப்பீட்டில் உலர்களம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுசமயம் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.