திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்முடிபூண்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள கரும்பு குப்பம் எல்லையம் மன் கோவில் பகுதியில் அருள் ஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கும்மிடிப் பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு இணை இயக்குனர் வடமேற்கு மண்டலம் உத்தரவின் பேரில் மாவட்ட அலுவ லர் இ பாலசுப்பிரமணியம் மேற் பார்வையில் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து அருள் ஜோதி மெட்ரிகுலே ஷன் பள்ளி மாணவ மாணவிகளு க்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத் தினர்.

பின்னர் மாணவ மாணவி கள் பாதுகாப்பான பசுமை பட்டாசு களை பயன்படுத்தி மாசு இல்லா மல் தீபாவளி கொண்டாடுவதாக உறுதிமொழி எடுத்து மத்தாப்பு கொளுத்தி வெளிப்படுத்தினர். முன்னதாக விபத்தில் தீபாவளி எப்படி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை மாணவ மாணவிகளிடம் வழங்கப்பட்டது மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி யபோது பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து பேனர்கள் வைத்து விளக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி நிலையம் சார்பில் ஏற்படுத்திய விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *