திருமங்கலம் அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்த இடத்
தினை ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு…..
திருமங்கலம் மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தொலைபேசி
மூலம் தொடர்பு கொண்டு நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் ஆர் பி. உதயகுமார் கூறியதாவது;
தற்போது பெய்து வரும் கனமழையால் திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்க பாதையில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் மக்கள் 3 கி. மீ தூரம் சுற்றி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மழை நீர்த்தேங்கினால் உடனடியாக தண்ணீரை பம்பு மூலம் தேங்கிய நீரை அப்புறப் படுத்துவோம். தற்போது அப்புறப்படுத்தப்படவில்லை இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்ணீரைக் வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
ஆனால், அரசு தரப்பில் 2 கோடி மக்களுக்கு மெசேஜ் அனுப்பி யதாக கூறப் படுகிறது ஆனால் இதுவரை எவ்வளவு பேருக்கு வந்தது என்று தெரிய வில்லை?
தற்போது பேரிடர் காலத்தை, பேரிடர் முன்பு, பேரிடர் நடக்கும் பொழுது,பேரிடர் முடிந்தபின் என்று மூன்று கட்டங்களாக பிரித்து பார்த்து மீட்பு பணியில் செயல்பட வேண்டும்.
தற்போது திருமங்கலம் தொகுதியில் மின்சாரம் தாக்கி எட்டு ஆடுகள் இறந்துள்ளன.
பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் விழும் நிலையில் உள்ளது. இதை எல்லாம் முன்னெச்
செரிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.
குற்றாலத்தில் கடுமையான வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டது
இந்த வெள்ள பெருக்கிற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அங்கு 16 வயது சிறுவன் அஷ்வின் வெள்ளத்தில் சிக்கி பலியாய் இருக்க மாட்டார்.
தற்போது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதை தற்போது அங்கு குளிக்க தடை விதித்துள்ளது இந்தியா விஞ்ஞான யுகத்தில் திகழ்ந்துவரும் நிலையில் தமிழகம் முன்னேற்றத்தில் பின்தங்கி தான் உள்ளது என கூறினார்.