தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;-

தென்காசி மாவட்டம்
குற்றாலம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு 68 வது ஆண்டை தொடங்குகின்ற நவம்பர் 1ஆம் தேதி குற்றாலத்திற்க்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொன்டாடினார்கள்

அப்போது அங்கு நின்ற சுற்றுலா பயணிகளிடத்திலும் பத்திரிக்கையாளர் களிடத்திலும் பேசிய அகரக்கட்டு லூர்து நாடார் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதிக்கு முன்பு செங்கோட்டை தாலுகாக்கு உட்பட்ட பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது

திருவிதாங்கூர் சமஸ்தானம் தமிழ் மக்கள் மீது பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டு மக்களை கொடுமைபடுத்தி உள்ளது இதனை எதிர்த்து செங்கோட்டை பகுதியில் மார்சல் நேசமணி நாடார் குஞ்சன் நாடார் சிதம்பரம் பிள்ளை போன்றோர்கள் தலைமையில் பல்வேறு போராட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு எதிராக நடத்தி இருக்கிறார்கள் இந்த போராட்டத்தில் 11 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய போது
கேரளா அரசு நிலவளங்களை தமிழகத்திற்கு தருவதாகவும் மலை வளங்களை கேரளத்திற்கு வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்து எல்லைகள் பிரிக்கப்பட சம்மதம் தெரிவித்தன

ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நிலங்களை மட்டும் வைத்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது அதனால் எங்களுக்கு நீர் வளமும் வேண்டும் என்று குற்றாலம் பகுதிகளையும் தமிழகத்துக்கு வேண்டும் என்று கேட்டு பெற்று தந்தார்கள்

குற்றாலம் இன்று தமிழகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான் குற்றாலத்தில் இருக்கின்ற ஒன்பது அருவிகளில் 8 அருவிகள் இயற்கையாகவே அருவிகளாக இருந்தவை பழைய குற்றாலம் பகுதிகள் மட்டும் அறிவிகளாக இல்லாமல் ஆங்காங்கே தண்ணீர் சிதறி வீணாகி இருக்கிறது இதனை கண்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சிதறி வீனாகின்ற இந்த தண்ணீர் ஓரிடத்தில் கொண்டு சேர்த்தோம் என்றால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் பழைய குற்றாலம் பாறைகள் உடைக்கப்பட்டு அருவிகளாக உருவாக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது

இதற்கான கல்வெட்டு பழைய குற்றாலத்தில் இருக்கிறது பழைய குற்றாலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இன்றளவும் பயன் பெறுகிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தான் அதனால் குற்றாலம் செங்கோட்டை பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு 68 ஆவது ஆண்டை தொடங்குகின்ற இந்த நாளை மகிழ்ச்சியோடு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடி மகிழ்கின்றோம் தமிழக முதல்வர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பெயரை குற்றாலத்தில் நினைவு கூறுகின்ற வகையில் குற்றாலத்தில் காமராஜருக்கு முழு திருவுவச் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக கூறினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் டேவிட் நாடார் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கொட்டாகுளம் கணேசன் கொட்டாகுளம் இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் சண்முகராஜ். இலஞ்சி நாடார் உறவின்முறை கணேசன் . அய்யாபுரம் இந்து நாடார் உறவின்முறை குருசாமி லெட்சுமணன் குத்தாலிங்கம். ரவிச்சந்திரன் கடையநல்லூர் முருகன். சுரண்டை சின்னத்தம்பி. குத்துகல் வலசை ராம்குமார் .மோகன். கீழப்பாவூர் ராஜ்குமார். மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *